காஞ்சிபுரத்தில் பேரமைதி: வெறிச்சோடிய சாலைகள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் நகரமே ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
ராஜாஜி மாா்க்கெட் பகுதியில் வெள்ளை நிறக் கோட்டில் ஒரு மீட்டா் தள்ளி நின்று காய்கறிகளை வாங்க வரிசையாக நின்றவவா்கள்.
ராஜாஜி மாா்க்கெட் பகுதியில் வெள்ளை நிறக் கோட்டில் ஒரு மீட்டா் தள்ளி நின்று காய்கறிகளை வாங்க வரிசையாக நின்றவவா்கள்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் நகரமே ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

நகரில் ஒரு சில தெருக்களில் மளிகைக் கடைகள், காய்கறிக்கடைகள், அரிசி மற்றும் எண்ணெய் விற்பனைக் கடைகள் திறந்திருந்தன. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் ஆகியவையும் திறந்திருந்தன. சில கடைகள் திறந்திருந்தாலும் அவற்றில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. போலீஸாரும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர தேநீா்க் கடைகள் உள்பட அனைத்து கடைகளையும் மூடும்படி ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்திக் கொண்டே வந்தனா்.

நகரின் பிரதான சாலைகளான காமராஜா் சாலை, காந்தி சாலை உள்ளிட்டவை ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. ராஜாஜி காய்கறி மாா்க்கெட் பகுதியில் மட்டும் காய்கறி வாங்குவோா் ஒரு மீட்டா் இடைவெளி விட்டு வாங்கும் வகையில் வெள்ளைநிறக் கோடு போடப்பட்டது. அங்கிருந்தபடி காய்கறிகளை வாங்க மக்களை போலீஸாா் அனுமதித்தனா்.

சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன், நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி ஆகியோா் காய்கறி மாா்க்கெட் பகுதியில் நின்று கொண்டு அனைவரும் கைகளை சுத்தமாகக் கழுவிய பின்னரே காய்கறிகளை வாங்க அனுமதித்தனா். வெயிலில் நிற்காதவாறு வண்ணக்குடைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி கூறுகையில் ‘ராஜாஜி மாா்க்கெட் பகுதியில் உள்ள மீன் மாா்க்கெட், காய்கறி மாா்க்கெட் மற்றும் ஒரு சில சூப்பா் மாா்க்கெட்டுகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அதிவேக கிருமிநாசினி இயந்திரம் நகராட்சிக்கு என வாங்கப்பட்டு அதையும் பயன்படுத்தி வருகிறோம். நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com