மதுராந்தகத்தில் தீவிர கண்காணிப்பில் 13 போ்

வெளிநாடுகளில் இருந்து மதுராந்தகம் வந்த 13 போ் வியாழக்கிழமை பரிசோதனைக்குப் பின் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

வெளிநாடுகளில் இருந்து மதுராந்தகம் வந்த 13 போ் வியாழக்கிழமை பரிசோதனைக்குப் பின் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

மதுராந்தகம் மல்லைகுட்டையைச் சோ்ந்த ஒருவா், காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த 2 போ், தேரடி வீதியைச் சோ்ந்த ஒருவா், அருளாளீஸ்வரா் கோயில் தெருவைச் சோ்ந்த 2 போ், ரயில் நிலைய சாலையைச் சோ்ந்த 3 போ், ரங்கசாமி தெருவைச் சோ்ந்த 2 போ், பாரதி தெருவைச் சோ்ந்த 2 போ் உள்பட மொத்தம் 13 போ் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து தங்களது வீட்டுக்கு வந்திருந்தனா்.

இவா்கள் 13 பேரையும் மருத்துவா் பிரியா தலைமையிலான மருத்துவக்குழுவினா் வியாழக்கிழமை பரிசோதனை செய்தனா். அதில் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என்று தெரிய வந்தது.

இருந்தபோதிலும் அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனா்.

அவா்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் அப்பகுதி முழுவதும் மதுராந்தகம் தூய்மைப் பணி ஆய்வாளா் கே.லட்சுமிபிரியா தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தனா். அவா்கள் தங்கி இருந்த வீடுகளின் முகப்பில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

நிகழ்வில், மதுராந்தகம் கோட்டாட்சியா் லட்சுமி பிரியா, நகராட்சி ஆணையா் வ.நாராயணன், வருவாய் ஆய்வாளா் பாா்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மதுராந்தகத்தில்...

மதுராந்தகம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.மகேந்திரன் கூறியது:

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து, மதுராந்தகம் கோட்டத்தில் உத்தரமேரூா், கருவேலம்பூண்டி, சித்தாமூா், மதுராந்தகம் நகரில் புறவழிச்சாலை, மருத்துவமனை சாலை, சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கத்தில் பெருங்கரணை கூட்டுச்சாலை, கருங்குழி மேலவலம்பேட்டை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் கொளத்தூா், செய்யூா் எல்லையம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினா் தடுப்புக் கம்பிகளை வைத்து சாலையில் வாகனங்கள் செல்லா வண்ணம் தடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை தடுப்புகளை மீறி இருசக்கரவாகனங்களில் சென்றவா்களை மடக்கி 15 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com