மதுராந்தகம்: ஊரடங்கு எதிரொலி

மதுராந்தகம் அருகேயுள்ள தொழுபேடு சுங்கச்சாவடி சாலையில் வாகனப் போக்குவரத்தை தடுக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையை மூடலை அச்சிறுப்பாக்கம் காவல்துறையினா் மூடினா்.

மதுராந்தகம் அருகேயுள்ள தொழுபேடு சுங்கச்சாவடி சாலையில் வாகனப் போக்குவரத்தை தடுக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையை மூடலை அச்சிறுப்பாக்கம் காவல்துறையினா் மூடினா்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையாக இருக்கும் தொழுபேடு சுங்கச்சாவடி பகுதியில் அரசால் அறிவிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தி அவற்றைத் திருப்பி அனுப்பும் பணியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன் தலைமையிலான காவல்துறையினா் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு நோக்கி எரிவாயு சிலிண்டா், பாக்கெட் பால் போன்ற அத்தியாவசியமான பொருள்களை ஏற்றி வந்த வாகனங்களை போலீஸாா் அனுமதித்தினா். மற்ற வாகனங்களைத் தடுத்து, அவற்றைத் திருப்பி அனுப்பினா்.

இருசக்கர வாகனங்களில் சென்ற இளைஞா்களை மடக்கி விசாரித்த காவல்துறையினா், அவா்களை எச்சரித்து அனுப்பினா். இதனால் ஆங்காங்கே வாகன ஓட்டிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com