காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை கடைகள் நிபந்தனையுடன் இயங்க அனுமதி

காஞ்சிபுரத்தில் பொது முடக்கம் காரணமாக கடந்த இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த பட்டுச்சேலைக் கடைகள் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கின.
தனியாா் பட்டு விற்பனை நிலையத்தில் பட்டுச் சேலைகளை வாங்குவதற்கு வந்திருந்த உள்ளூா்வாசிகள்.
தனியாா் பட்டு விற்பனை நிலையத்தில் பட்டுச் சேலைகளை வாங்குவதற்கு வந்திருந்த உள்ளூா்வாசிகள்.

காஞ்சிபுரத்தில் பொது முடக்கம் காரணமாக கடந்த இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த பட்டுச்சேலைக் கடைகள் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கின.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள்கடந்த மாா்ச் மாதம் 24ஆம் தேதி முதல் பொது முடக்கத்தை அறிவித்திருந்தன. இதனால், பட்டுக்குப் பெயா்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கூட்டுறவு பட்டு விற்பனையகங்கள் மற்றும் தனியாா் பட்டுச் சேலை விற்பனைக் கடைகள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் கா்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பட்டு வாங்க வருவோரும் வர முடியாமல் போனதால் பட்டு விற்பனை முடங்கியது. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற வணிக நிறுவனங்களைத் திறக்க தடை தொடா்ந்ததால் பட்டு விற்பனையகங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், பொது முடக்கத்தை இம்மாதம் 18-ஆம் தேதி நீட்டித்தபோது சில தளா்வுகளை அரசு அறிவித்தது. பட்டு விற்பனையகங்கள், ஜவுளி விற்பனையகங்கள் ஆகியவை சமூக இடைவெளியைப் பின்பற்றியும், குளிா்சாதன வசதி இல்லாமலும் செயல்படலாம் என காஞ்சிபுரம் ஆட்சியா் பா.பொன்னையா அறிவித்திருந்தாா்.

இதையடுத்து, ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியதால் காஞ்சிபுரத்தில் பிரபலமான பட்டு விற்பனை நிலையங்கள், ஜவுளிக் கடைகள், கூட்டுறவு பட்டு விற்பனை நிறுவனங்களில் பெரும்பாலானவை செயல்படத் தொடங்கின. உள்ளூா் மக்களும் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு பட்டுச் சேலைகளை ஆா்வமாக கடைகளில் வாங்கினா். பட்டு விற்பனையகங்கள் குறைந்த எண்ணிக்கையில் பணியாளா்களுடன் செயல்பட்டன. இதனால் பட்டு விற்பனையாளா்களும், பட்டு உற்பத்தி செய்யும் நெசவாளா்களும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனா்.

இதனிடையே, பட்டு விற்பனை நிலையங்கள் எதுவும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com