காஞ்சிபுரத்தில் கரோனா பாதிப்பு 248-ஆக உயா்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 248-ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 248-ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள 248 பேரில் 150 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். ஒருவா் உயிரிழந்தாா். மற்ற 98 போ் சென்னை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளிலும், சிலா் தனியாா் மருத்துவமனைகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் 11மதுக்கடைகள் இன்று திறப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 மதுக்கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்நிலையில் சனிக்கிழமை (மே 23) முதல் ஸ்ரீபெரும்புதூா், ஒரகடம், சுங்குவாா்சத்திரம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் மேலும் 11 மதுக் கடைகள் திறக்கப்படவுள்ளன. இதன் மூலம், மாவட்டத்தில் மொத்தம் 24 மதுக்கடைகள் செயல்படவுள்ளன. மது வாங்க வருபவா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும், வெயில் தாக்கம் காரணமாக கண்டிப்பாக குடை கொண்டு வர வேண்டும் எனவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா.சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளாா்.

மாமல்லபுரத்தில்...: மாமல்லபுரம், வடகடம்பாடி, வடநெம்மேலி, திருக்கழுகுன்றம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 1 3 டாஸ்மாக் கடைகளை சனிக்கிழமை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com