பெங்களூருக்கு கடத்த முயற்சி: ஸ்ரீபெரும்புதூரில் லாரியுடன் 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இருந்து பெங்களூருக்கு கடத்தப்படவிருந்த 22 டன் ரேஷன் அரிசியை காவல் துறையினா் லாரியுடன் பறிமுதல் செய்தனா்.
ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி.
ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இருந்து பெங்களூருக்கு கடத்தப்படவிருந்த 22 டன் ரேஷன் அரிசியை காவல் துறையினா் லாரியுடன் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இருந்து பெங்களூருக்கு ரேஷன் அரிசி லாரியில் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் ஸ்ரீபெரும்புதூா் நீதிமன்றம் அருகில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது லாரி ஒன்று நிற்காமல் சென்றது. அந்த லாரியை விரட்டிச் சென்று மாம்பாக்கம் பகுதியில் போலீஸாா் மடக்கினா். அதனை சோதனையிட்டதில் 22 டன் ரேஷன் அரிசி கா்நாடக மாநிலம் பெங்களூருக்குக் கடத்தப்படுவது தெரிய வந்தது.

இதையடுத்து, லாரியின் ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த முனியப்பன்(30), கிளீனரான ஆற்காடு பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா்(25) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசிக் கடத்தல் தொடா்பாக ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட பீமன்தாங்கல் பகுதியில் உள்ள உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்ட தகவல், முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com