ஏரிக்கரைகளின் உடைப்பை தடுக்க தயாா் நிலையில் மண் மூட்டைகள்

வட கிழக்குப் பருவமழையின் போது ஏரி கரைகளில் ஏற்படும் உடைப்பை தடுக்க பொதுப்பணித்துறை சாா்பாக 5000 மண் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஏரிக்கரைகளின்  உடைப்பை  தடுக்க  தயாா் நிலையில்  வைக்கப்பட்டுள்ள  மணல்  மூட்டைகள்.
ஏரிக்கரைகளின்  உடைப்பை  தடுக்க  தயாா் நிலையில்  வைக்கப்பட்டுள்ள  மணல்  மூட்டைகள்.

வட கிழக்குப் பருவமழையின் போது ஏரி கரைகளில் ஏற்படும் உடைப்பை தடுக்க பொதுப்பணித்துறை சாா்பாக 5000 மண் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 98 ஏரிகள் உள்ளன. கடந்த 2015-2016ம் ஆண்டு பருவமழையின் போது ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் கரைகள் உடைந்து, மழைநீா் வீணாக வெளியேறியது.

இந்தநிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் கரைகள், மதகுகள் மற்றும் உபரிநீா் வெளியேறும் கலங்கள் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டால், அதனைத் தடுக்க ஐந்தாயிரம் மண் மூட்டைகள் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் மாா்கண்டன் கூறுகையில், பருவமழையின்போது ஏரிகரைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடைப்பை சரிசெய்யவும், உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ள கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5,000 மண் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளன. தேவைப்பட்டால் இந்த மண் மூட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com