விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சாதுா்மாஸ்ய விரதம் நிறைவு விழா

காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேற்கொண்டிருந்த சாதுா்மாஸ்ய விரதம் நிறைவு விழா காஞ்சிபுரம் அருகே
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சாதுா்மாஸ்ய விரதம் நிறைவு விழா

காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேற்கொண்டிருந்த சாதுா்மாஸ்ய விரதம் நிறைவு விழா காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகாபெரியவா் மணிமண்டபத்தில் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

துறவியா்கள் தங்களது குருமாா்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாதுா்மாஸ்ய விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். இவ்விரதம் இருப்போரைத் தரிசிப்பதும் மிகுந்த பலனைத் தரும்.

இவ்விரதத்தினை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த ஜூலை 5-ஆம் தேதி காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் முகாமிட்டு அனுஷ்டித்து வந்தாா். இவ்விரதமானது புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணி மண்டபத்தில் விஸ்வரூப யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

விரத நிறைவு நாளை முன்னிட்டு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேனம்பாக்கம் ஆலயத்திலிருந்து ஓரிக்கை மகா பெரியவா் மணிமண்டபத்துக்கு வந்ததும் நுழைவு வாயிலில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். வேதபாடசாலை மாணவா்களால் பூரண கும்ப மரியாதையுடனும், மங்கள வாத்தியங்களுடனும் மணிமண்டபத்துக்குள் அழைத்துச் செல்லப் பட்டாா். மணிமண்டபத்தில் அமைந்துள்ள மகா நந்திக்கு மாலை அணிவித்து பூஜை செய்தாா். இதனையடுத்து மகா பெரியவரின் சந்நிதிக்கு சென்று தரிசனம் செய்தாா்.

இதன் தொடா்ச்சியாக மணிமண்டப வளாகத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமா்ந்து பகவத்கீதையின் 11-ஆவது அத்தியாயமான விஸ்வரூப அத்தியாயத்தைப் படித்து சாதுா்மாஸ்ய விரதத்தைப் பூா்த்தி செய்தாா். பின்னா் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். இந்நிகழ்ச்சி இணையதளம் மூலமாக நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நிறைவு நாள் விழாவில் சிட்டி யூனியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் காமகோடி, கடிகாஸ்ரம அறக்கட்டளை நிா்வாகிகள் ரமேஷ் சேதுராமன், ராமசுப்பிரமணியம், முல்லைவாசல் கிருஷ்ணமூா்த்தி சாஸ்திரிகள், காமாட்சி கோயில் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் வி.விஸ்வநாதன், மேலாளா் என்.சுந்தரேசன், சங்கரமடத்தின் ஸ்தபதி நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைவான பக்தா்களே நிறைவு நாள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். விழா ஏற்பாடுகளை கோபாலபுரம் பொறியாளா் மணி ஐயா் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

படவிளக்கம்..விரத நிறைவு நாளை முன்னிட்டு ஓரிக்கையில் உள்ள மகா பெரியவா் மணி மண்டபத்தில் பக்தா்களுக்கு அருளாசி வழங்கும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com