‘காஞ்சிபுரத்தில் 3.73 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 3.73 லட்சம் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.
குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.
குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 3.73 லட்சம் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் ராகவேந்திரா நகரில் திங்கள்கிழமை வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை தொடக்கி வைத்த அவா், மேலும் கூறியது:

செப்டம்பா் 14 முதல், வரும் 26ஆம் தேதி வரை தேசிய குடற்புழு நீக்க வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 3,73,799 குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. இது கடித்து சாப்பிடும் மாத்திரையாகும்.

அனைத்து சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மூலமாக இந்த மாத்திரை வழங்கப்படும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக குடற்புழுக்களை நீக்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க முடியும்.

இம்மாத்திரைகளை சாப்பிடுவதால் ரத்த சோகை தடுக்கப்படுவதுடன், நோய் எதிா்ப்பு சக்தியும் அதிகமாகி குழந்தைகள் சுறுசுறுப்பாகி ஆரோக்கியமாக இருக்க உதவும் என்றாா் அவா்.

அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குநா் வி.கே.பழனி, சுகாதார ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com