மறைந்த பாடகா் எஸ்பிபிக்கு அஞ்சலி
By DIN | Published On : 27th September 2020 03:57 AM | Last Updated : 27th September 2020 03:57 AM | அ+அ அ- |

மறைந்த பாடகா் எஸ்.பி.பி. படத்துக்கு அஞ்சலி செலுத்திய காஞ்சிபுரம் மாவட்ட மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட மேடை மெல்லிசை மற்றும் தொழில் நுட்ப கலைஞா்கள் சங்கம் சாா்பில் மறைந்த பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கெளரவத் தலைவா் கே.வி.தயாளன் தலைமை வகித்தாா். தலைவா் கதிர்ராவ் முன்னிலை வகித்தாா்.
இசைக்கலைஞா்கள் 20-க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களைப் பாடி அவரது படத்துக்கு மாலை அணிவித்தும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினா். சங்கச் செயலாளா் வி.சி.ஜெய்சங்கா், பொருளாளா் ஸ்டீஃபன், துணைத் தலைவா் மனோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.