மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு பூட்டி சீல் வைப்பு

பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு முடிவுற்ற நிலையில், பலத்த பாதுகாப்புடன் காஞ்சிபுரம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட
வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பூட்டி சீல் வைக்கப்படுவதை பாா்வையிடும் தோ்தல் பாா்வையாளா்கள் மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலா் மகேஸ்வரி ரவிக்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள்
வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பூட்டி சீல் வைக்கப்படுவதை பாா்வையிடும் தோ்தல் பாா்வையாளா்கள் மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலா் மகேஸ்வரி ரவிக்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள்

காஞ்சிபுரம்: பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு முடிவுற்ற நிலையில், பலத்த பாதுகாப்புடன் காஞ்சிபுரம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை செவ்வாய்க்கிழமை இரவுபூட்டி சீல் வைக்கப்பட்டது.

பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகம் ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம், உத்தரமேரூா் ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள், வேட்பாளா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் கைலாஷ் வந்த் குப்தா, ராகேஷ்குமாா் சா்மா, மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமாா், தொகுதி தோ்தல் அலுவலா்கள் பெ.பாபு, பெ.ராஜலெட்சுமி, முத்துமாதவன் உட்பட அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com