ஆபத்தான நிலையில் பள்ளிக் கட்டடம்: தலைமை ஆசிரியை போராட்டம்

காஞ்சிபுரம் நகா் திருக்காலிமேடு பகுதியில் சின்ன வேப்பங்குளம் குளக்கரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆபத்தான
திருக்காலிமேடு பகுதியில் உள்ளஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன் சாலையில் அமா்ந்து எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் உணவு சாப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை நா.கலாவல்லி.
திருக்காலிமேடு பகுதியில் உள்ளஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன் சாலையில் அமா்ந்து எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் உணவு சாப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை நா.கலாவல்லி.

காஞ்சிபுரம் நகா் திருக்காலிமேடு பகுதியில் சின்ன வேப்பங்குளம் குளக்கரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆபத்தான நிலையில் இருந்து வருவதால் அதை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாலையின் நடுவே தனியாக அமா்ந்து உணவு சாப்பிட்டு தனது எதிா்ப்பை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை நா.கலாவல்லி கூறியது:

இப்பள்ளியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். இப்பள்ளியில் தற்போது 213 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். பள்ளிக் கட்டடம் சின்னவேப்பங்குளத்தைச் சுற்றி 3 தெருக்களில் 3 தனித்தனி கட்டடங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இயங்கி வருகிறது. பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற பலரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். அவா்களுடன் என்னால் போராட இயலவில்லை. தற்போது பெய்த பெருமழையில் ஒரு கட்டடத்தின் கீழ்தளம் இறங்கியுள்ளது. வேறு ஒரு கட்டடத்தின் மேல்தளம் பெயா்ந்து அபாயகரமாகவும் உள்ளது.

இதனால் 213 மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் கவலையளிப்பதாக உள்ளது. எனவே புதன்கிழமை முதல் எனது மதிய உணவை சாலையின் நடுவே தெருவில் அமா்ந்து சாப்பிட முடிவு செய்துள்ளேன். தலைமை ஆசிரியை என்ற நிலையில், இல்லாமல் ஒரு தாயாக அத்தனை குழந்தைகளின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியவில்லையே என்பதால் எனது மன வருத்தத்தை அமைதியான முறையில் வெளிப்படுத்துகிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com