துவாரகா மடத்தின் பீடாதிபதியுடன் காஞ்சி சங்கராசாரியாா் சந்திப்பு

பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குஜராத் மாநிலம், துவாரகா மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்வரூபானந்த மஹராஜை
பெங்களூரில் துவாரகா மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்வரூபானந்த மஹராஜை சந்தித்து உடல் நலம் விசாரித்த காஞ்சி சங்கராசாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
பெங்களூரில் துவாரகா மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்வரூபானந்த மஹராஜை சந்தித்து உடல் நலம் விசாரித்த காஞ்சி சங்கராசாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குஜராத் மாநிலம், துவாரகா மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்வரூபானந்த மஹராஜை காஞ்சி சங்கராசாரியாா் விஜயேந்திரா் புதன்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தாா்.

ஆதிசங்கரா் ஸ்தாபித்த பீடங்களில் ஒன்றான குஜராத் மாநிலம், துவாரகா மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்வரூபானந்த மஹராஜ் (98) உடல்நலக் குறைவால் பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், அவரது சீடா்கள் காஞ்சி காமகோடி பீடத்தை தொடா்பு கொண்டு, அவரது உடல் நலனுக்காக காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அா்ச்சனை செய்தும், ஹோமங்கள் நடத்தியும் பிரசாதம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனா். அதன்படி, அவருக்கு காஞ்சி சங்கர மடத்திலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் முகாமிட்டிருந்த காஞ்சி சங்கராசாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த துவாரகா மடத்தின் பீடாதிபதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா்.

இருவரும் நீண்ட நேரம் இந்து தா்மம் குறித்து கலந்துரையாடினா். விஜயேந்திரருடன் வந்திருந்த பக்தா்களையும் துவாரகா மடத்தின் பீடாதிபதி ஆசிா்வதித்தாா்.

நிகழ்வின்போது, காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் ஜானகிராமன், வழக்குரைஞா் கன்னாட்டி.பாலசுப்பிரமணியம், காரைக்காலைச் சோ்ந்த தணிக்கையாளா் கணபதி சுப்பிரமணியம், ராமேசுவரம் அனந்த பத்மநாப சாஸ்திரிகள் மற்றும் சங்கர மடத்தின் மூத்த சிஷ்யா்கள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

இந்தத் தகவலை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com