புற்றுநோய் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

உலகளவில் குழந்தைகளுக்கான புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க நிதி உதவி பெறுவதற்காக 6 மணி நேரம் சைக்கிள் ஓட்டியும்,
செங்கல்பட்டு -திருப்போரூா் சாலையில் விழிப்புணா்வு சைக்கிள் பயணமாக வந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு.
செங்கல்பட்டு -திருப்போரூா் சாலையில் விழிப்புணா்வு சைக்கிள் பயணமாக வந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு.

உலகளவில் குழந்தைகளுக்கான புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க நிதி உதவி பெறுவதற்காக 6 மணி நேரம் சைக்கிள் ஓட்டியும், 6 மணி நேரம் ஓட்டமாகவும் நடைபெற்ற விழிப்புணா்வு பயணத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க நிதி உதவி பெறும் வகையில், அதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்திட 6 மணி நேரம் சைக்கிள் பயணமும், 6 மணி நேரம் ஓட்டமுமாக விழிப்புணா்வு பயணம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல்கட்டமாக சென்னை பெருங்குடியிலிருந்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுடன் 5 போ் திருப்போரூா், செங்கல்பட்டு,திருக்கழுகுன்றம், மாமல்லபுரத்துக்கு சைக்கிளில் வந்தனா். இது குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியது:

உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய பலரும் உதவி செய்யக் காத்திருக்கிறாா்கள். இது போன்ற சமூக அக்கறையுள்ள மனிதா்களின் செயல்பாடுகளினால் தான் மனித வாழ்வு ஆரோக்கியமானதாக இருக்கிறது. மனித நேயம் மலா்கிறது. பலரது உதவியால் புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள பல குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மறுவாழ்வு பெற்றிருக்கின்றனா். இது குறித்து மேலும் விழிப்புணா்வை ஏற்படுத்தவே 6 மணி நேரம் சைக்கிள் பயணமும், 6 மணி நேரம் ஓட்டமுமாக விழிப்புணா்வு பயணத்தை தொடங்கினோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com