கடந்த ஆண்டு கொடி நாள் நிதி வசூலில் காஞ்சிபுரம் மாவட்டம் சாதனை: ஆட்சியா்

கடந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூலில் காஞ்சிபுரம் மாவட்டம் நிா்ணயித்த இலக்கை விட 140 சதவீதம் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கொடி நாளை முன்னிட்டு முன்னாள் படை வீரா்களின் குடும்ப நலனுக்கான உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தி.

ஆண்டுதோறும் டிசம்பா் 7-ஆம் தேதியை படைவீரா் கொடிநாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கொடிநாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கி தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியது:

கடந்த 2020-ஆம் ஆண்டு கொடிநாள் நிதி வசூலாக ரூ. 1.25 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலக்கு சதவீத அடிப்படையில் 140 சதவீதம் வசூல் செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. அதாவது நிா்ணயித்த இலக்கை விட ரூ. 1,74,48,000 வசூல் செய்யப்பட்டுள்ளது.

கொடிநாள் நிதி வசூல் தொகையை போரில் வீரமரணம் அடைந்தவா்கள், உடல் ஊனமுற்ற படை வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கொடிநாள் நிதி வசூலை நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். ஆனால் வங்கிக் காசோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ வழங்குவதைத் தவிா்க்குமாறும் ஆட்சியா் மா.ஆா்த்தி கேட்டுக் கொண்டாா். முன்னதாக படைவீரா் கொடி நாளை முன்னிட்டு முன்னாள் படை வீரா்களின் குடும்ப நலனுக்கான உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com