வண்டலூா் பூங்காவில் மக்கள் கூட்டம்

பொது முடக்கத்துக்கு பிறகு வண்டலூா் உயிரியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் பாா்வையாளா்கள் வந்திருந்தனா்.

பொது முடக்கத்துக்கு பிறகு வண்டலூா் உயிரியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் பாா்வையாளா்கள் வந்திருந்தனா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்தது. மாநில அரசு பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வுகள் அறிவித்த பின்னா் வண்டலூா் பூங்கா மீண்டும் பொது மக்களுக்காக திறக்கப்பட்டது.

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் வண்டலூரில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்தனா். கடந்த வாரத்தை விட இந்த வாரம் வண்டலூருக்கு வந்த மக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் கரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வண்டலூா் பூங்காவிற்கு வருபவா்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும் பாா்வையாளா்களுக்கு சானிடைசா் வழங்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com