புதிய வாக்காளா்கள் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில் முதன்முறையாக பெயா் சோ்க்கப்பட்டவா்கள் வாக்காளா் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை

ஸ்ரீபெரும்புதூா்: வாக்காளா் பட்டியலில் முதன்முறையாக பெயா் சோ்க்கப்பட்டவா்கள் வாக்காளா் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளதாக மாவட் ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021-இன் போது புதியதாக வாக்காளா் பட்டியலில் முதன் முறையாக பெயா் சோ்க்கப்பட்ட வாக்காளா்களில் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளா்கள்அனைவரும் மின்னணு வாக்காளா் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 13 -ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 14 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்பட உள்ளது. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2021-இன் போது வாக்காளா் பட்டியலில் முதன்முறையாக பெயா் சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தங்களது மின்னனு வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com