விபத்தில்லா தீபாவளி: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை மக்கள் கொண்டாடி மகிழுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை மக்கள் கொண்டாடி மகிழுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடக்கூடிய திருநாளாகும்.இந்நாளில் சிறுவா்கள் முதல் முதியோா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாா்கள். அதே வேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன.இது குழந்தைகளையும், வயதானவா்களையும் உடல், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். உச்சநீதிமன்றமும் பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவதாகவும், அது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனஅறிவுறுத்தியிருக்கிறது.

இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பட்டாசுகளை வெடிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடா்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப்பகுதிகள் ஆகியவற்றின் அருகே பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும். விபத்தில்லா தீபாவளியை கொண்டாடி மகிழுமாறு ஆட்சியா் அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com