கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் இந்து அமைப்பினா் கூட்டுப் பிராா்த்தனை

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கிளாய் பகுதியில் அரசு இடத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் இந்து அமைப்புகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை கூட்டுப் பிராா்த்தனையில்
கூட்டுப்  பிராா்த்தனை  நடத்திய  இந்து  அமைப்பினா்.
கூட்டுப்  பிராா்த்தனை  நடத்திய  இந்து  அமைப்பினா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கிளாய் பகுதியில் அரசு இடத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் இந்து அமைப்புகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

கிளாய் பகுதியில் சுமாா் 13 ஏக்கா் பரப்பளவு உள்ள அரசு ஓடை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியாா் சிலா் அப்பகுதியில் கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனா். இவற்றையும், அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த ஸ்ரீ கனகாம்பிகை உடனுறை ஸ்ரீ கனககாளீஸ்வரா் கோயிலையும் வருவாய்த் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினா். இந்த நிலையில், கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் இந்து அமைப்புகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை மாலை ஸ்ரீபெரும்புதூா்-திருவள்ளூா் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com