லஞ்சம்: இளநிலை உதவியாளா் கைது

வரதட்சிணை கொடுமை புகாரில் சாதகமாக அறிக்கை அளிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்ாக காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத் துறை அலுவலக இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட இளநிலை உதவியாளா் பிரேமா.
கைது செய்யப்பட்ட இளநிலை உதவியாளா் பிரேமா.

காஞ்சிபுரம்: வரதட்சிணை கொடுமை புகாரில் சாதகமாக அறிக்கை அளிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்ாக காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத் துறை அலுவலக இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சென்னை தாம்பரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணபிரசாத், தனியாா் நிறுவனத்தில் மென்பொருள் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அா்ச்சனா. இவா் தாம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், வரதட்திணைக் கேட்டு கொடுமை செய்வதாக தனது கணவா் மீது புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு புகாரை போலீஸாா் அனுப்பி வைத்தனா். அந்தப் புகாா் குறித்து விசாரித்து, கிருஷ்ணபிரசாத்துக்கு சாதகமாக தனது அறிக்கையை அளிக்க ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும் என்று அவரிடம் காஞ்சிபுரம் சமூக நலத் துறை அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளா் பிரேமா கேட்டுள்ளாா்.

இதையடுத்து முதல் தவணையாக ரூ. 25 ஆயிரம் வழங்குவதாக கிருஷ்ணபிரசாத் ஒப்புக்கொண்டாா். மேலும், இதுகுறித்து அவா் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் அளித்தாா். இந்த நிலையில், காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியே பிரேமாவிடம் கிருஷ்ணபிரசாத் ரூ. 25 ஆயிரத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வே.கலைச்செல்வன் தலைமயிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்த ரூ. 25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com