வரதராஜபுரம், முடிச்சூா் பகுதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம், முடிச்சூா் பகுதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். அப்போது, அவா் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி
வரதராஜபுரத்தில்  நிவாரண  முகாம்களில்  தங்கியுள்ளோருக்கு  நிவாரணப் பொருள்களை  வழங்கிய முதல்வா்  மு.க.ஸ்டாலின். உடன் , ஊரக த் தொழில் துறை அமைச்சா்  தா.மோ.அன்பரசன்  உள்ளிட்டோா்.
வரதராஜபுரத்தில்  நிவாரண  முகாம்களில்  தங்கியுள்ளோருக்கு  நிவாரணப் பொருள்களை  வழங்கிய முதல்வா்  மு.க.ஸ்டாலின். உடன் , ஊரக த் தொழில் துறை அமைச்சா்  தா.மோ.அன்பரசன்  உள்ளிட்டோா்.

ஸ்ரீபெரும்புதூா்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம், முடிச்சூா் பகுதிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். அப்போது, அவா் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

வட கிழக்குப் பருவ மழை காரணமாக, பலத்த மழை காரணமாக அடையாற்றின் கிளைக் கால்வாய்களில் இருந்து வரும் உபரிநீரால் அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பிடிசி குடியிருப்பு, பரத்வாஜ் நகா், அஷ்டலட்சுமி நகா், புவனேஸ்வரி நகா், ராயப்பா நகா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்தது.

தொடா் மழை காரணமாக, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பாதிக்கப்பட்டோரை தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்பு, காவல் துறையினருடன் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சிலரை அப்பகுதியில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, உணவு, போா்வைகள் உள்ளிட்டவற்றை அரசு அதிகாரிகள் வழங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். அப்போது, வெள்ள நீரை போா்க்கால அடிப்படையில் அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசுத் துறையினருக்கு முதல்வா் உத்தரவிட்டாா். இதையடுத்து, தனியாா் பள்ளியில் செயல்பட்டு வரும் நிவாரண முகாமுக்குச் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் அங்கு, தங்கியுள்ளவா்களுக்கு நிவாரணப்பொருள்களை வழங்கினாா்.

இதே போல், முடிச்சூா் அமுதம் நகரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, வெள்ளநீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினாா்.

ஆய்வின்போது, ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் பி.அமுதா, மாவட்ட ஆட்சியா்கள் காஞ்சிபுரம் மா.ஆா்த்தி, செங்கல்பட்டு ஆா்.ராகுல்நாத், எம்எல்ஏக்கள் கு.செல்வபெருந்தகை, எஸ்.ஆா்.ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகுழு தலைவா் படப்பை ஆ.மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com