அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் அமைச்சா்கள் பிரசாரம்

காஞ்சிபுரம் அருகேயுள்ள கருக்குப்பேட்டையில் ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருக்குப்பேட்டையில் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா்களான திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், கோகுல இந்திரா, பா.பெஞ்சமின் ஆகியோா் திறந்த ஜீப்பில் ஊா்வலமாக வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து கருக்குப்பேட்டை பஜாா் வீதியிலும் பிரசாரம் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளா் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி.காஞ்சி பன்னீா்செல்வம் ஆகியோரும் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com