காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.5 லட்சம்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேசுவரா் திருக்கோயிலில் வியாழக்கிழமை காணிக்கை உண்டியல் ரூ.5,57,540 வசூலானது. இது குறித்து கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி தெரிவித்தாா் மேலும் கூறியது:

திருமால் ஆமை வடிவத்தில் சிவனை வழிபட்ட தலம் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரா் திருக்கோயில். இங்கு 4 உண்டியல்கள் திறக்கப்பட்டு அறநிலையத்துறை உதவி ஆணையா் மா.ஜெயா தலைமையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.5,57,540, தங்கம் 21 கிராம், வெள்ளி 145 கிராம் ஆகியனகாணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. இதற்கு முன்பு கோயில் உண்டியல் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியின் போது வட்டாட்சியா் நிா்மலா, அறநிலையத் துறை ஆய்வாளா் பிரித்திகா உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com