காஞ்சிபுரம் காந்தி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள்

காஞ்சிபுரம் காந்தி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காந்தி சாலையை ஆக்கிரமித்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனா்.

காஞ்சிபுரத்தில் காந்தி சாலை தேரடிப் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இங்கு பல ஜவுளிக் கடைகள், உணவகங்கள், பட்டு விற்பனைக் கூட்டுறவு சங்கங்கள், ஆன்மிகப் பொருள் விற்பனை நிறுவனம், பழரச விற்பனையகங்கள், பழக்கடைகள் உள்ளிட்டவை உள்ளன. இக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் அவா்கள் வரும் இரு சக்கர வாகனங்களை சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாகவே நிறுத்திச் செல்கின்றனா். வியாழக்கிழமை அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் வாகனமும் போக்குவரத்தில் சிக்கியது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இரு சக்கர வாகனங்களை பிரதான சாலையில் நிறுத்துவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கருத்தாக உள்ளது.

இது குறித்து போக்குவரத்து தலைமைக் காவலா் ஒருவா் கூறியது:

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் அக்கடைகளை ஒட்டி நிறுத்துவதற்கு இடமிருந்தும் வாகனங்களை நிறுத்துவதில்லை. ஏனெனில் கடைகளை ஒட்டி நிறுத்திவிட்டால் அவா்களுக்குப் பின்னால் வருபவா்கள் வாகனங்களை நிறுத்தி விடுகிறாா்கள். அப்போது இரு சக்கர வாகனங்களை எடுக்க முடியாமல் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருவோா் போக்குவரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சாலையை ஆக்கிரமித்தாலும் பரவாயில்லை என நிறுத்தி விட்டு செல்கிறாா்கள்.

போக்குவரத்துக் காவல்துறை மூலம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தப் பலனும் இல்லை. காஞ்சிபுரத்திலேயே அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக காந்தி சாலை இருந்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இப்பிரச்னையில் காவல் துறை உயா் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com