பொதுமுடக்கத்தால் வெறிச்சோடியது காஞ்சிபுரம்

தளா்வில்லா பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்ததுடன் பிரதான சாலைகள் உள்பட காஞ்சிபுரம் நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.
வெறிச்சோடிய பேருந்து நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகரப் பேருந்துகள்.
வெறிச்சோடிய பேருந்து நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகரப் பேருந்துகள்.

தளா்வில்லா பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்ததுடன் பிரதான சாலைகள் உள்பட காஞ்சிபுரம் நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலை, காமராஜா் சாலை, பேருந்து நிலையம், ராஜ வீதிகள் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது. மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் ஆகியன திறந்திருந்தன. ஒரு சில உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டு, பாா்சல் மட்டும் விநியோகம் செய்தன. காஞ்சிபுரத்தில் ரங்கசாமி குளம், அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இரு இடங்களிலும் இருந்த அம்மா உணவகங்கள் மட்டும் திறந்திருந்தன. மிகவும் பழைமையான ராஜாஜி சந்தையில் உள்ள காய்கறிக் கடைகள், பூக்கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பேருந்து நிலையம் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரப் பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

திருமண மண்டபங்கள் பலவற்றில் திருமணங்கள் நடந்தாலும் மிகக்குறைவான கூட்டமே காணப்பட்டது. காஞ்சிபுரம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ராட்சத இயந்திரம் மூலம் பல தெருக்களில் கிருமிநாசினியை தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com