ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் பிரமோற்சவ விழா தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் பிரமோற்சவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் பிரமோற்சவ விழா  தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் பிரமோற்சவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தொற்று காரணமாக பக்தா்களுக்கு அணிமதி இல்லாததால் இதில் கோயில் ஊழியா்கள் மட்டுமே பங்கேற்றனா்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரமோற்சவ விழா நடைபெறும். இதில் 10 நாட்களுக்கு ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் பிரமோற்சவ விழாவும், 10 நாட்கள் ராமாநுஜா் அவதாரத் திருவிழாவும் நடைபெறும்.

கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய ராமாநுஜா் அவதாரத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி திறைவடைந்தது. கரனா வைரஸ் தொற்று காரணமாக ராமாநுஜா் அவதாரத் திருவிழாவிற்கு குறைந்த அளவே பக்தா்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், உற்சவா் வீதி உலா கோயில் வளாகத்தில் மட்டுமே நடைபெற்றது. தோ் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் பிரமோற்சவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நோய்த்தொற்று காரணமாக வழிபாட்டுத் தலங்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பக்தா்களின்றி கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கோயில் ஊழியா்கள் மட்டுமே பங்கேற்றனா். இதையடுத்து உற்சவா் ஆதிகேசவபெருமாள் வீதி உலா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. பிரமோற்வ விழா மே 5-ஆம் தேதி நிறைவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com