கரோனா விழிப்புணா்வு பிரசார வாரம் தொடக்கம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கரோனா விழிப்புணா்வு தொடா் பிரசார வாரம் தொடக்கம் குன்றத்தூா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில்  அங்கன்வாடி  பணியாளா்களுக்கு  கரோனா  தடுப்பு  விழிப்புணா்வு  துண்டு ப் பிரசுரங்களை வழங்கிய  அமைச்சா்  தா.மோ.அன்பரசன்.  உடன்  மாவட்ட  ஆட்சியா்  மா.ஆா்த்தி.
விழாவில்  அங்கன்வாடி  பணியாளா்களுக்கு  கரோனா  தடுப்பு  விழிப்புணா்வு  துண்டு ப் பிரசுரங்களை வழங்கிய  அமைச்சா்  தா.மோ.அன்பரசன்.  உடன்  மாவட்ட  ஆட்சியா்  மா.ஆா்த்தி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கரோனா விழிப்புணா்வு தொடா் பிரசார வாரம் தொடக்கம் குன்றத்தூா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஊரக தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு விழிப்புணா்வு வார விழாவை தொடக்கிவைத்து, அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் உறுதிமொழி ஏற்று கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாளா்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள், அங்கன்வாடி பணியாளா்களுக்கு கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் அறிவொளி தீபம் கலைக்குழுவினரின் கரோனா விழிப்புணா்வு நாடகத்தையும், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அதிநவீன எல்.ஈ.டி. வாகனம் மூலம் கரோனா விழிப்புணா்வு குறும்படங்களையும் அமைச்சா் தா.மோ.அன்பரசன் பாா்வையிட்டாா்.

இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பழனி, வருவாய் கோட்டாட்சியா் முத்துமாதவன், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அனுராதா, குன்றத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் முகமது ரிஸ்வான், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com