முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
டிச.30ஆம் தேதி காஞ்சியில் மகா பெரியவர் சுவாமிகள் வார்ஷிக ஆராதனை மகோற்சவம்
By DIN | Published On : 10th December 2021 05:55 PM | Last Updated : 10th December 2021 06:19 PM | அ+அ அ- |

மகா பெரியவர் என பக்தர்களால் அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக இருந்து வந்த மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 28 வது வார்ஷிக ஆரதனை மஹோற்சவம் வரும் 30ஆம் தேதி காஞ்சி சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பது, காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக 87 ஆண்டுகள் இருந்து சேவை செய்தவர் பக்தர்களால் மகா பெரியவர் என அழைக்கப்படும் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது 28 வது வார்ஷிக ஆராதனை மஹோற்சவம் இம்மாதம் 30 ஆம் தேதி வியாழக்கிழமை காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது.
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அனுக்கிரகத்தோடும், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாணைப்படியும் வைதீக முறைப்படியில் நடைபெறுகிறது. மகா பெரியவர் சுவாமிகளை தரிசித்த நேரங்களில் அவரை அண்டியவர்களின் சகல துக்கங்களையும் நீக்கியவர். வேததர்மம் தழைத்தோங்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இன்று காஞ்சிபுரத்தில் பிருந்தாவனத்தில் இருந்து கொண்டு கருணையுடன் அனுக்கிரகித்து வருகிறார்.
இதையும் படிக்க- அதிமுக உட்கட்சி தேர்தல்: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்
இப்பெருமைக்குரியவரின் 28வது வார்ஷிக ஆராதனை மஹோற்சவம் இம்மாதம் 28 ஆம் தேதி தொடங்கி வரும் 30 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த மூன்று நாட்களிலும் காஞ்சி சங்கர மடத்தில் நடைபெறும் உற்சவத்தின் போது சதுர்வேத பாராயணம், பக்திச் சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம் ஆகியனவும் மாலை நேரங்களில் பிரபல வித்வான்களின் இன்னிசைக் கச்சேரிகளும் நடைபெறவுள்ளது.
பக்தர்கள் யாவரும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு குருவருளை அடையுமாறும் கேட்டுக் கொள்வதாகவும், மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்கள் 98408 33575 மற்றும் 9423104648 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார்.