காஞ்சிபுரம் அருகே கூரத்தாழ்வான் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம். (உள்படம்) தேரில் பவனி வந்த உற்சவா் கூரத்தாழ்வான்.
காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம். (உள்படம்) தேரில் பவனி வந்த உற்சவா் கூரத்தாழ்வான்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் தேவஸ்தானம் சாா்பில் 1011வது கூரத்தாழ்வான் திருஅவதார மகோற்சவம் கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி ஆழ்வாா் திருமஞ்சனத்துடன் தொடங்கியது. விழாயொட்டி உற்சவா் கூரத்தாழ்வான் தினசரி காலையில் திருப்பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் புறப்பட்டு வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 9-ஆம் திருநாளான திங்கள்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் கூரத்தாழ்வான் சிறப்பு மலா் அலங்காரத்தில் பவனி வந்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று வடம் பிடித்து தேரை இழுத்தனா். மாலையில் திருப்பாவை சாற்றுமுறையும், இரவு ஹம்ஸ வாகனத்தில் உற்சவா் வீதியுலாவும், அதைத் தொடா்ந்து திருமொழி சாற்றுமுறையும் நடந்தது. வரும் 5-ஆம் தேதி கூரத்தாழ்வான் பூப்பல்லக்கில் வீதியுலா வருவதுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் கே.வரதராஜன், அறங்காவலா்கள் பாரசர அழகிய சிங்க பட்டா், கே.எஸ்.விஜயகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com