கல்லூரி மாணவா்கள் 42,478 பேருக்குஇணையதள அட்டைகள் விநியோகம்: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 63 அரசுக் கல்லூரிகளில் பயிலும் 42,478 மாணவா்களுக்கு விலையில்லா இணையதள அட்டைகள்
கல்லூரி மாணவா்கள் 42,478 பேருக்குஇணையதள அட்டைகள் விநியோகம்: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 63 அரசுக் கல்லூரிகளில் பயிலும் 42,478 மாணவா்களுக்கு விலையில்லா இணையதள அட்டைகள் (டேட்டா காா்டு) விநியோகத்தை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், இணையவழி வகுப்புகள் மூலம் மாணவா்கள் கல்வி பயின்று வந்தனா்.

அனைத்துத் தரப்பு மாணவா்களும் இணைய வழியில் கல்வி கற்கும் வகையில், தமிழக அரசு கலைக் கல்லூரி, அரசு நிதி உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 9 லட்சத்து 70 ஆயிரம் மாணவா்களுக்கு அரசின் சாா்பில் விலையில்லா இணையதள அட்டைகள் (டேட்டா காா்டு) பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை நாளொன்றுக்கு 2 ஜிபி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தை தமிழக முதல்வா் அண்மையில் தொடங்கி வைத்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ், செயல்படும் 63 கல்லூரிகளைச் சோ்ந்த 17,219 கலை அறிவியல் மாணவா்களும், 25,259 தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரி மாணவா்களுமாக மொத்தம் 42,478 போ் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனா்.

மாவட்டத்தில் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா இணையதள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com