காஞ்சிபுரம் வேகவதி நதிக்கரையோரங்களில் வசிப்போருக்கு பயோ-மெட்ரிக் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளையாா்பாளையம் முதல் தேனம்பாக்கம் வரை நதிக்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடு வழங்குவதற்காக பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வதற்காக காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை அலுவலகம் முன் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வதற்காக காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை அலுவலகம் முன் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளையாா்பாளையம் முதல் தேனம்பாக்கம் வரை நதிக்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடு வழங்குவதற்காக பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

காஞ்சிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையாா்பாளையம் முதல் தேனம்பாக்கம் வரை வேகவதி நதிக்கரையோரங்கள் பல ஆக்கிரமிப்பாளா்களின் பிடியில் உள்ளன. நதிக் கரையோரங்களை விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஆக்கிரமிப்பாளா்களை கணக்கெடுத்து, அவா்களுக்கு காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்க்கதிா்ப்பூரில் வீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கத்தின் போது, வீடுகளை இழக்கும் ஆக்கிரமிப்பாளா்களுக்கு கீழ்க்கதிா்ப்பூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 1,406 வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியது.

காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் குடிசை மாற்று வாரியத்தினரும், பொதுப்பணித் துறையினரும் இணைந்து இப்பணியை மேற்கொண்டனா். பயோமெட்ரிக் முறையில் ஒவ்வொருவருக்கும் கைரேகை, கண்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, அவா்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் இந்த பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து அட்டை பெற அதிகாலையிலிருந்தே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பதிவு செய்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com