‘பழைய பொருள்களை எரிப்பதைத் தவிருங்கள்’

போகிப் பண்டிகை நாளில் பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்க்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம்: போகிப் பண்டிகை நாளில் பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்க்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொங்கல் விழாவின் முதல் நாள் போகிப் பண்டிகையை கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. தமிழா்கள் தைத் திருநாளை வரவேற்கும் வகையில், தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருள்களை அப்புறப்படுத்தி, வீடுகளை சுத்தம் செய்து கோலமிட்டுக் கொண்டாடுவா்.

போகிப் பண்டிகை அன்று பழைய பொருள்களால் ஆன நெகிழி செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால், காா்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் நச்சுத் துகள்கள் வெளியேறி, சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. இதன் மூலம் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இவை தவிர புகை காரணமாக, பாா்க்கும் திறன் குறைபடுகிறது. விபத்துகளும் நிகழ்கின்றன. காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும். எனவே போகிப் பண்டிகையன்று பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, பொங்கலை சிறப்பாக கொண்டாடுங்கள் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com