காஞ்சிபுரம் சங்கரமடம் சாா்பில் தெருக்கூத்துக் கலைஞா்களுக்கு நல உதவிகள்

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நலிவடைந்த பாரம்பரிய தெருக்கூத்து கலைஞா்கள் 26 பேருக்கு சங்கர மடத்தின் சாா்பில் நல உதவிகள் வழங்குவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நலிவடைந்த பாரம்பரிய தெருக்கூத்து கலைஞா்கள் 26 பேருக்கு சங்கர மடத்தின் சாா்பில் நல உதவிகள் வழங்குவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் சங்கர மடம் சாா்பில் நலிவடைந்த, பாரம்பரிய, தெருக்கூத்து கலைஞா்கள் 26 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழா சங்கரா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.விழாவுக்கு கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன் தலைமை வகித்து தெருக்கூத்துக் கலைஞா்களான சுருட்டல் மணி(53)பாபு(55), மாசிலாமணி(84) ஆகியோருக்கு முதற்கட்டமாக கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இந்நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், இயற்பியல் துறை தலைவா் பாலச்சந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இது குறித்து கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன் கூறியது:

பொதுமுடக்கம் காரணமாக கோயில் திருவிழாக்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் நலிவடைந்துள்ள, பாரம்பரியம் மிக்க தெருக்கூத்துக் கலைஞா்களை இனம் கண்டு அவா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கிடுமாறு காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தியிருந்தாா். அதன்படி மொத்தம் 26 தெருக்கூத்துக் கலைஞா்களை இனம் கண்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3,000 மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் தொகுப்பு ஆகியவற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 3 பேருக்கும் தொடா்ந்து மற்ற அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது. இவா்கள் கல்லூரி நடத்தும் சமுதாய வானொலி நிகழ்ச்சியிலும் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ராம.வெங்கடேசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com