உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க பாஜக தயார்:  எல்.முருகன்

உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க பாஜக தயாராக இருக்கிறது. தற்போது இருக்கும் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்று தமிழக  பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.


காஞ்சிபுரம்:   உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க பாஜக தயாராக இருக்கிறது. தற்போது இருக்கும் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்று தமிழக  பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
 காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். காஞ்சிபுரம் அருகே வையாவூரில் உள்ள தனியார் பள்ளியில் முன்களப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை வழங்கினார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  தேர்தலின் போது இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக அறிவித்தது, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று சொன்னது, சமையல் எரிவாயுக்கு மானியம் தருவதாக கூறியது. இவை அனைத்தும் திமுக கொடுத்த  வாக்குறுதிகள். ஆனால் இவை குறித்து  ஆளுநர்  உரையில் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது. மு.க.ஸ்டாலின் புகழ்பாடும் உரையாகவே ஆளுநரின் உரை இருந்தது.
வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. பாஜகவைப் பொருத்தவரை எப்போது உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறது. தற்போது இருக்கும் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றார். பேட்டியின் போது பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, நகர பொதுச் செயலாளர் வி.ஜீவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com