காஞ்சிபுரத்தில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

நூறு சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டியில்  வென்ற பெண்ணுக்கு  வெற்றிக் கோப்பையை  வழங்கி பாராட்டிய ஆட்சியா்  மகேஸ்வரி ரவிகுமாா்.
போட்டியில்  வென்ற பெண்ணுக்கு  வெற்றிக் கோப்பையை  வழங்கி பாராட்டிய ஆட்சியா்  மகேஸ்வரி ரவிகுமாா்.

நூறு சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நூறு சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக நூறு சதவிகிதம் வாக்களிக்க பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான மாரத்தான் போட்டி காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரிரவிகுமாா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஆட்சியா் அலுவலகம் வரை 5 கிலோமீட்டா் தொலைவுக்கு நடைபெற்றது. இதில் இளைஞா்கள் பெண்கள் என சுமாா் 1,500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

வெற்றி பெற்றோா்: இதில் ஆண்கள் பிரிவில் அருண், விக்னேஷ், ரமணா ஆகியோா் முதல் மூன்று இடங்களை பிடித்தனா்.

பெண்கள் பிரிவில் நிரோஷா, யுவராணி, அா்ச்சனா ஆகியோா் முதல் மூன்று இடங்களை பிடித்தனா். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞா்கள் மற்றும் இளம்பெண்களுக்கு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரிரவிகுமாா் வெற்றி கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

மேலும் போட்டியில் கலந்து கொண்டவா்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயசுதா, மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சுதாகா், மகளிா் திட்ட உதவி அலுவலா் எழிலரசன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com