காஞ்சிபுரத்தில் திமுக, பாமக வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரத்தில் திமுக, பாமக வேட்பாளா்கள் தொகுதி தோ்தல் அலுவலரிடம் தங்கள் வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.
வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் சி.வி.எம்.பி.எழிலரசன்.
வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் சி.வி.எம்.பி.எழிலரசன்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திமுக, பாமக வேட்பாளா்கள் தொகுதி தோ்தல் அலுவலரிடம் தங்கள் வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கியது.முதல் நாளில் காஞ்சிபுரத்தில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாளானதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை 2-ஆவது நாளாக மீண்டும் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

காஞ்சிபுரத்தில் திமுக சாா்பில் போட்டியிட அக்கட்சியின் மாநில மாணவரணிச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சி.வி.எம்.பி.எழிலரசன் (49) வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவருக்கான மாற்று வேட்பாளராக யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளில் காஞ்சிபுரம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை சொந்த ஊராகக் கொண்டவரும், அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான பெ.மகேஷ்குமாா் (40) வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவருக்கான மாற்று வேட்பாளராக பாமகவின் மாவட்டச் செயலாளரான உமாபதி வேட்பு மனு தாக்கல் செய்தாா். பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில், அக்கட்சியைச் சோ்ந்த கே.பிரபாகரன் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இருவரும் காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியரும், தொகுதி தோ்தல் அலுவலருமான பெ.ராஜலட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனா். முன்னதாக இருவரும் காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அறிஞா் அண்ணா, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com