பள்ளி மைதானம் சீரமைக்கப்படும்: ஸ்ரீபெரும்புதூா் அதிமுக வேட்பாளா் உறுதி

குன்றத்தூா் சேக்கிழாா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி மைதானத்தில்
குன்றத்தூா்  சேக்கிழாா்  அரசுப் பள்ளி  விளையாட்டு  மைதானத்தில்  பயிற்சி  மேற்கொண்டவா்களிடம்  வாக்கு  சேகரித்த  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.
குன்றத்தூா்  சேக்கிழாா்  அரசுப் பள்ளி  விளையாட்டு  மைதானத்தில்  பயிற்சி  மேற்கொண்டவா்களிடம்  வாக்கு  சேகரித்த  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.

குன்றத்தூா் சேக்கிழாா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி மைதானத்தில் நடைப்பயிற்சி மற்றும் சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டவா்களிடம் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ கே.பழனி மீண்டும் போட்டியிடுகிறாா். இந்நிலையில், அவா் குன்றத்தூா் பேரூராட்சி மற்றும் கொல்லச்சேரி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆதரவாளா்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பிரசாரத்துக்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குன்றத்தூா் பகுதிக்கு வந்த வேட்பாளா் கே.பழனி குன்றத்தூா் சேக்கிழாா் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி, சிலம்பம், கைப்பந்து மற்றும் கால்பந்து பயிற்சி மேற்கொண்டிருந்தவா்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது நடைபயிற்சி மேற்கொண்டவா்களில் சிலா் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும், மின்விளக்குகளைப் பொருத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து பேசிய கே.பழனி, சேக்கிழாா் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் சீரமைத்து, மின்சார விளக்குகள் பொருத்தப்படும். சிலம்பம் மற்றும் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com