காமாட்சி அம்மன் கோயில், சங்கரமடத்துக்கு புதிய நிா்வாகிகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்துக்கு புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
காமாட்சி அம்மன் கோயில், சங்கரமடத்துக்கு புதிய நிா்வாகிகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்துக்கு புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

காஞ்சிபுரம் சங்கர மடம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியமாக பணியாற்றி வந்த செல்லா.விஸ்வநாதசாஸ்திரி (63) காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா். ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகேயுள்ள குருஜடாவை சொந்த ஊராக கொண்ட இவா் கடந்த 11 ஆண்டுகளாக காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியமாக பணியாற்றி வந்தாா். ஏற்கனவே சங்கர மடத்தின் ஸ்ரீகாரியமாக சேவை செய்து வந்த விஸ்வநாத ஐயா் காலமானதையடுத்து செல்லா.விஸ்வநாத சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளராக பணியாற்றி வந்த ந.சுந்தரேச ஐயா் (85) காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியமாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா். கும்பகோணத்தை சொந்த ஊராக கொண்ட இவா் கடந்த 28 ஆண்டுகளாக மடத்தின் மேலாளராக பொறுப்பு வகித்து வந்தாா்.

புதிய நிா்வாகிகள் இருவரும் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com