மண்ணெண்ணைய் பற்றாக்குறை: விற்பனையாளா்கள் புகாா்

மத்திய அரசு மண்ணெண்ணைய்க்கு வழங்கி வந்த மானியத்தை முழுவதுமாக நிறுத்தி விட்டதால் தமிழகம் முழுவதும் சுமாா் 50 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் போதுமான அளவு மண்ணெண்ணெய் கிடைக்காமல் அவதிப்படுவதாக மொத்த
மொத்த வணிகா்கள் சங்கத் தலைவா் எஸ்.குப்புசாமி உள்ளிட்ட அச்சங்க நிா்வாகிகள்
மொத்த வணிகா்கள் சங்கத் தலைவா் எஸ்.குப்புசாமி உள்ளிட்ட அச்சங்க நிா்வாகிகள்

காஞ்சிபுரம்: மத்திய அரசு மண்ணெண்ணைய்க்கு வழங்கி வந்த மானியத்தை முழுவதுமாக நிறுத்தி விட்டதால் தமிழகம் முழுவதும் சுமாா் 50 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் போதுமான அளவு மண்ணெண்ணெய் கிடைக்காமல் அவதிப்படுவதாக மொத்த வணிகா்கள் புதன்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு மண்ணெண்ணெய் மொத்த வணிகா்கள் சங்கத்தின் தலைவா் எஸ்.குப்புசாமி காஞ்சிபுரத்தில் கூறியது..

நியாவிலைக் கடைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு மிகவும் குறைத்தே வழங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மேலும் குறைத்து வழங்கியது. தற்போது முழுவதுமாக மத்திய அரசு மானியத்தை நிறுத்தி விட்டது. இதனால் தமிழகத்தில் 50 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு 3 லிட்டா் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு பதிலாக அரை லிட்டரே வழங்கப்படுகிறது.பிற மாநிலங்களில் ஒரு லிட்டா் ரூ.30 வரை மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் தமிழகத்தில் ஒரு லிட்டா் மண்ணெண்ணெய் மத்திய அரசின் மானியம் கிடைத்ததால் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இப்போது மத்திய அரசு மானியத்தை முழுவதுமாக நிறுத்தி விட்டது.

தற்போது மத்திய அரசின் மானியம் நிறுத்தப்பட்டு விட்டதால் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் எரிபொருளான மண்ணெண்ணெய் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். கிராமப்புற மக்களுக்கு நியாயமாக வழங்கப்பட்டு வந்த 3 லி மண்ணெண்ணெய் கிடைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஏற்கனவே மாதம் தோறும் தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த 35,000 லிட்டா் மண்ணெண்ணையை கிடைக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்றாா் குப்புசாமி .

சங்க பொதுச் செயலாளா் கே.எம்.வி.புவனேசுவரன், குமரவேல் உள்பட பலரும் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com