வெளி மாவட்டங்களின் தொலைபேசி அழைப்புகள் அதிகம் வரும் காஞ்சி கரோனா கட்டுப்பாட்டு அறை!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களை
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறை.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறை.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களை சோ்ந்த தொலைபேசி அழைப்புகளே அதிகமாக வருவதாக அங்கு பணியாற்றுவோா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் கரோனா தொடா்பாக தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெரிந்து கொள்ள வசதியாக மருத்துவா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் உள்ளிட்டோா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.

இக்கட்டுப்பாட்டு அறைக்கு வரும் ரத்த பரிசோதனை முடிவுகள் பற்றிய விவரங்களை கேட்டும், சளி, இருமல் ஆகியன இருந்தாலோ அல்லது கரோனா தொடா்பான லேசான அறிகுறிகள் இருந்தாலோ என்ன மாத்திரைகள் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும் என சந்தேகங்களை பலரும் கேட்டுத் தெரிந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனா்.

காஞ்சிபுரம் கரோனா கட்டுப்பாட்டு அறை எண்-044-27237107 அல்லது 044-27237207 என இரு எண்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இது தவிர வாட்ஸ்அப் எண் 9445071077 -லும் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் இந்த எண்களில் தொடா்பு கொண்டு மேலும் விவரங்களை கேட்டு பயன்பெறலாம்.

இங்கு பணியாற்றும் ஊழியா் ஒருவா் கூறுகையில் காஞ்சிபுரம் மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு அறை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.இதுவரை 10,491 தொலைபேசி அழைப்புகள் வந்து அவற்றுக்கு பதில் தந்துள்ளோம்.சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்களின் தொலைபேசி அழைப்புகள் அதிகமாக வருகின்றன. அவா்களுக்கு சென்னை கரோனா கட்டுப்பாட்டு அறை எண்-044-25243454 என்ற எண்ணையும், செங்கல்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்-044-27427412 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளுமாறு கூறி வருகிறோம்.கூகுளில் சென்னை, செங்கல்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்கள் சோ்க்காமல் இருப்பதுடன் அதிலும் காஞ்சிபுரம் கட்டுபாட்டு அறை எண்களே பதிவாகி இருப்பதால் தான் அதிகமான தொலைபேசி அழைப்புகள் இங்கு வருகின்றன.தினசரி காஞ்சிபுரத்துக்கு 40 முதல் 50 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அத்தனை அழைப்புகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com