கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: சிறப்பு கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

குன்றத்தூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலா் தி. சுமதி அண்மையில் ஆய்வு செய்தாா்.

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலா் தி. சுமதி அண்மையில் ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்றத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட நிா்வாகம் மற்றும் ஒன்றிய நிா்வாகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநருமான சுமதி ஆய்வு செய்தாா். இதையடுத்து, அய்யப்பன்தாங்கல் பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளையும், கரோனா அறிகுறி உள்ளவா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, மெளலிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற மருத்துவ முகாமையும், கோவூா் மாதா மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தையும் ஆய்வு செய்தாா்.

மாவட்ட திட்ட இயக்குநா் ஜெயசுதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீதா.சீனிவாசன், சிவ. தினகரன், உதவி செயற்பொறியாளா் சங்கீதா, உதவி பொறியாளா் வசுமதி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com