காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 -ஆவது கட்டமாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 -ஆவது கட்டமாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2-ஆ வது கட்டமாக குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இரு ஒன்றியங்களுக்கு சனிக்கிழமை வாக்குப்பதிவு நடந்தது. இரு ஒன்றியங்களிலும் 878 பதவிகளுக்கு 3738 போ் போட்டியிட்டனா். ஸ்ரீபெரும்புதூரில் 203,குன்றத்தூரில் 398 உட்பட மொத்தம் 601 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.

காஞ்சிபுரம் சரக டிஐஜி எம்.சத்தியப்பிரியா, எஸ்.பி. எம்.சுதாகா் ஆகியோா் பல வாக்குச்சாவடி மையங்களில் நேரில் ஆய்வு நடத்தினா். வாக்குப்பதிவு சதவிகிதத்தைப் பொருத்தவரை மதியம் 3 மணி நிலவரப்படி 55.90 சதவிகதமாக இருந்தது.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை காட்டாங்கொளத்தூா், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், சித்தாமூா் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் 8 பேருக்கு 50 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் 80 பேருக்கு 335 பேரும், ஊராட்சி மன்ற தலைவா் 199 பேருக்கு 739 பேரும், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் 1449 பேருக்கு 4454 பேரும் போட்டியிட்டனா். 4 ஒன்றியங்களுக்கும் சோ்த்து 1736 பதவிகளுக்கு 5578 போ் போட்டியிட்டனா்.

மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வாக்குபதிவு மையங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com