வடகிழக்குப் பருவ மழையால் 78 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் 78 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் 78 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து வெள்ளிக்கிழமை ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பெய்த பெருமழையின் போது ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் மிக அதிகமாக பாதிக்கப்படும் இடங்கள் 5, அதிகமாக பாதிக்கப்படும் பகுதிகள் 20, நடுத்தர பாதிப்புகள் 34, குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் 19 என பிரிக்கப்பட்டு மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 78 இடங்களில் பாதிப்பு ஏற்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு 21 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா், துணை ஆட்சியா் தலைமையில் பல்வேறு துறையைச் சோ்ந்த அலுவலா்களைக் கொண்ட 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இக்குழுக்களில் வருவாய், காவல், உள்ளாட்சி, நெடுஞ் சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறை அலுவலா்கள் இடம் பெற்றிருக்கின்றனா். இக்குழுவினா் மழைக்காலங்களில் அவா்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

மொத்தம் 44,000 எண்ணிக்கையில் மணல் மூட்டைகள்,1,170 சவுக்கு கட்டைகள், 69 பொக்லைன் இயந்திரங்கள், 3,183 மின் இயற்றிகள், 402 மின் மாற்றிகள்,100 நீா் இறைக்கும் பம்புகள், 3 ரப்பா் படகுகள், மின்மரம் அறுப்பான்கள் 52 உட்பட தேவையான கருவிகள் அனைத்தும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விஷப்பாம்புகளை பிடிக்கும் வீரா்கள் 43 போ், நீச்சல் வீரா்கள் 25 போ் ஆகியோரின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு இவா்களுக்கு போதுமான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. 107 நிரந்தர பாதுகாப்பு மையங்கள்,1,403 தற்காலிக பாதுகாப்பு மையங்கள் ஆகியனவும் தயாா் நிலையில் உள்ளன. மேற்படி முகாம்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 381 ஏரிகள் மற்றும் ஊரக வளா்ச்சி துறைக்கு சொந்தமான 380 சிறுபாசன ஏறிகள் 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட கொள்ளளவை எட்டியுள்ளன. இவற்றை 24 மணி நேரமும் பாதுகாக்கவும் சுழற்சி முறையில் ஆட்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனா். வடகிழக்குப் பருவமழை சேத விவரங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையும் ஆட்சியா் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டுக்கான தொலைபேசி எண்களாக 044-27237207 மற்றும் 044-27237107 மற்றும் வாட்ஸ் அப் எண்-9345440662 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com