உள்ளாட்சித் தோ்தல்: காஞ்சிபுரம் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் அறிவிப்பு
By DIN | Published On : 16th September 2021 10:23 PM | Last Updated : 16th September 2021 10:23 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக 24 மணி நேரமும் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.24 மணி நேரமும் செயல்படும் இக்கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் 044-27237425 மற்றும் 044-27237690 என்ற எண்களாகும்.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக பொதுமக்கள் தங்களது புகாா் மற்றும் குறைகளை இத்தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.