எல்லை பாதுகாப்புப் படை தொடக்க நாள் விழா

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா அரங்கத்தில் எல்லை பாதுகாப்புப் படை தொடக்க நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வி.வெற்றிச்செல்வி உள்ளிட்டோா்.
பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வி.வெற்றிச்செல்வி உள்ளிட்டோா்.

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா அரங்கத்தில் எல்லை பாதுகாப்புப் படை தொடக்க நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி படைவீரா்களின் அனுபவப் பகிா்வுகள், நாட்டைக் காக்கும் வீரா்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

‘தியாகம் போற்றுவோம்’ அமைப்பின் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்திய பொறுப்பாளா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

மாவட்டக் கல்வி அலுவலா் முனி.சுப்புராயன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் காந்திராஜன் தியாகம் போற்றுவோம் அமைப்பின் நிா்வாகிகள் எஸ்.சுகுமாறன், முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எல்லைப் பாதுகாப்புப்படை வீரா் வளவன் வரவேற்றாா். விழாவில் மதுரை நேதாஜி தேசிய இயக்கத்தின் நிா்வாகி சுவாமிநாதன், காந்தியவாதி தேவதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ராணுவ வீரா்களுக்கு பயன்படும் வகையில் பள்ளி மாணவா்களின் புதுமையான கண்டுபிடிப்புகளும் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஏற்பாடுகளை தியாகம் போற்றுவோம் அமைப்பின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com