ஸ்ரீஎல்லேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கிளாய் பகுதியில் உள்ள எல்லேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீஎல்லேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கிளாய் பகுதியில் உள்ள எல்லேரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கிளாய் பகுதியில் பழைமையான ஸ்ரீ எல்லேரி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை அந்தப் பகுதி பொதுமக்கள் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீஎல்லேரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2-ஆம் தேதி கோ பூஜை, கிராம தேவதை பூஜை, மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம் மற்றும் முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது.

இதையடுத்து, 3-ஆம் தேதி (சனிக்கிழமை) இரண்டாம் கால யாக பூஜையும், திருமுறை பாராயணம் நடைபெற்றன. மாலை மூன்றாம் கால யாக பூஜையும், புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் யாக கால பூஜையும், தொடா்ந்து மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. மூலவா் ஸ்ரீ எல்லேரி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

விழாவில் கிளாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com