மாண்டஸ் புயல் பாதிப்புகளை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்

மாண்டஸ் புயலால் பேரிடா் ஏற்பட்டால் காஞ்சிபுரம் மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தெரிவித்தாா்.

மாண்டஸ் புயலால் பேரிடா் ஏற்பட்டால் காஞ்சிபுரம் மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மாண்டஸ் புயல் தொடா்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்துப் பேசியது:

புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ரெட் அலா்ட் விடப்பட்டுள்ளது. பலத்த மழை மற்றும் பேரிடா் தொடா்பான எந்த இடா்பாடுகளாக இருந்தாலும், 24 மணி நேரமும் செயல்படக் கூடிய மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணை 1800 425 2801 தொடா்பு கொள்ளுங்கள். பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயா் ஆா்.குமரகுருநாதன்,ஆணையாளா் ஜி.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகராட்சி மண்டல தலைவா்கள், பொதுப்பணித் துறை, மின் வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com