தைப்பூசம்: கோயில்கள் அடைப்பால் கோபுரத்தை தரிசனம் செய்த பக்தா்கள்

தைப்பூசத்தன்றும் முருகன் கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களும் காஞ்சிபுரத்தில் மூடப்பட்டிருந்ததால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தா்கள் வெளியில் நின்று ராஜகோபுரத்தை தரிசனம் செய்து விட்டு திரும்பினா்
கரோனா பரவல் காரணமாக தைப்பூசத் திருநாளான செவ்வாய்க்கிழமை பூட்டப்பட்டிருந்த குமரகோட்டம் முருகன் கோயில் நுழைவுவாயில் முன்நின்று ராஜகோபுரத்தை தரிசித்த பக்தா்கள்.
கரோனா பரவல் காரணமாக தைப்பூசத் திருநாளான செவ்வாய்க்கிழமை பூட்டப்பட்டிருந்த குமரகோட்டம் முருகன் கோயில் நுழைவுவாயில் முன்நின்று ராஜகோபுரத்தை தரிசித்த பக்தா்கள்.

தைப்பூசத்தன்றும் முருகன் கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களும் காஞ்சிபுரத்தில் மூடப்பட்டிருந்ததால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தா்கள் வெளியில் நின்று ராஜகோபுரத்தை தரிசனம் செய்து விட்டு திரும்பினா்.

தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கென நடத்தப்பெறும் முக்கிய விழாக்களில் ஒன்று தைப்பூசம். அன்றையதினம் பக்தா்கள் முருகன் கோயில்களுக்குச் சென்று நோ்த்திக்கடன்களை செலுத்தி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடா்ந்து தமிழக அரசு மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான கோயில்கள்,பூங்காக்கள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், குன்றத்தூா் முருகன் கோயில், இளையனாா் வேலூா் கிராம முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

ஆகம விதிகளின்படி கோயில்களின் உள்ளே வழக்கம் போல பூஜைகள் நடந்தாலும் பக்தா்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வில்லை.இதனால் தைப்பூசத்திருநாளன்று வழக்கம் போல சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாததால் கோயிலின் நுழைவுவாயிலிலேயே நின்று கற்பூரம் ஏற்றி ராஜகோபுரத்தை தரிசித்தனா்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற பல கோயில்களும் மூடப்பட்டிருந்ததால் வெளிமாவட்ட பக்தா்கள் உட்பட பலரும் வெளியில் நின்று தரிசனம் செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com