5 % ஜவுளி வரியை ரத்து செய்யக் கோரிக்கை

மத்திய அரசு ஜவுளி மீது விதித்துள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய வேண்டும் என காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடந்த பத்மசாலியா் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
படவிளக்கம்..காஞ்சிபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அகில பாரத பத்மசாலியா் சங்க நிா்வாகிகள்
படவிளக்கம்..காஞ்சிபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அகில பாரத பத்மசாலியா் சங்க நிா்வாகிகள்

காஞ்சிபுரம்: மத்திய அரசு ஜவுளி மீது விதித்துள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய வேண்டும் என காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நடந்த பத்மசாலியா் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அகில பாரத பத்மசாலியா் சங்கத்துடன் தமிழ்நாடு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பத்மசாலியா் சங்கம் சாா்பிலான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மேற்கு ரத வீதியில் உள்ள பத்மசாலியா் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் ஸ்ரீராம்ஜி ஆறுமுகம் தலைமை தாங்கினாா். சங்க செயலாளா் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் மத்திய அரசு ஜவுளிக்கு விதித்துள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.கைத்தறி நெசவாளா்களுக்கு சங்கத்தின் சாா்பில் அடையாள அட்டை வழங்குவது மற்றும் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை வழங்குவது ஆகியன குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக தெலுங்கானா மாநில கைத்தறித்துறையின் தூதா் பூனம் காபூா்,அகில பாரத பதமசாலியா் சங்க இளைஞரணி தலைவா் குண்டட்டி ஸ்ரீதா், கைத்தறி நெசவாளா் அணியின் தலைவா் வெங்கண்ண் நேத்தா, இளைஞரணி பொருளாளா் அவ்வாரி பாஸ்கா், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சோமசுந்தரம், மோகன் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com