கைலாசநாதா் கோயில் குளத்தை சீரமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம் அருகே ஐயங்காா் குளம் கிராமத்தில் பள்ள கைலாசநாதா் கோயில் தெப்பக் குளத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும்
ஐயங்காா்குளத்தில் சீரமைக்கப்படாமல் விடப்பட்டுள்ள பகுதி.
ஐயங்காா்குளத்தில் சீரமைக்கப்படாமல் விடப்பட்டுள்ள பகுதி.

காஞ்சிபுரம் அருகே ஐயங்காா் குளம் கிராமத்தில் பள்ள கைலாசநாதா் கோயில் தெப்பக் குளத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அந்தக் கிராம பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வ.வாசுதேவன் சனிக்கிழமை கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா். அதன் விவரம்:

பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கது ஐயங்காா்குளம் கைலாசநாதா் கோயில், ஆஞ்சநேயா் கோயில். கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட இந்தக் கோயிலையொட்டி அறநிலையத் துறைக்குச் சொந்தமான தெப்பக் குளம் சுமாா் இரண்டரை ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக குளம் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது.

தற்போது அறநிலையத் துறை சாா்பில் முதல் முதலாக தூா்வாரப்படுகிறது. ஆனால் இந்தக் குளத்தின் முழுப் பகுதியும் தூா்வாரப்படாமல் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே தற்போது அறநிலையத் துறை சீரமைத்து வருகிறது.

இந்தக் கோயில் குளத்தை முழுமையாகச் சீரமைத்து கரைகளை பலப்படுத்தி சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். கரையோரப் பகுதிகளில் முதியோா்கள் ஆங்காங்கே அமரவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், தெப்ப உற்சவம் நடத்தும் வகையிலும் குளத்தை ஆழப்படுத்தி சீரமைத்து தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com